Skip to main content

Posts

Showing posts from April, 2018
Welcome my news 1 சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் பாக்கி பணம் ₹28 ஆயிரம் கொடுக்க மறுத்ததால் கட்டையால் சரமாரியாக அடித்து வயதான தம்பதியை கொலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 சவரன் தாலிச்செயின் மற்றும் ₹12 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், துப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (62). எல்.ஐ.சி ஏஜென்ட். இவரது மனைவி வள்ளி நாயகி (55). தம்பதி, சென்னை ராஜிவ் காந்தி சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில், 3வது மாடியில் வசித்து வந்தனர். கீழ்த்தளம் வாகன நிறுத்துமிடமாக உள்ளது. முதல் மாடியில், பணிகள் நடந்து வருகிறது. 2, 4வது மாடியை சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாயாண்டி வாடகைக்கு விட்டுள்ளார்.